Tuesday, August 20, 2013

காதல் கொள்கிறது என்னை ...



********************************************
காதல் கொள்கிறது என்னை ...
கண் மூடி திறக்கும் முன்னே ...
********************************************

ரங்கனின் பாதம் பணியாதே
என் நாயகர் கால் வருடி செல்லடி
நீ கரை தொடும்போதெல்லாம்
என் கோபம் கரை தாண்டுகிறதடி

கனவெல்லாம் நீயே
கண் திறந்து பார்த்தாலும் நீயே
கானல் நீராய்...

மெய்யாக வர பொழுதுதில்லையோ
இல்லை வரத்தான் பிடிக்கவில்லையோ ???

விரும்பினேன் உன்னை
உன் அழகிற்காக
உன் அடக்கத்திற்காக
உன் அசைவிற்காக

உள்ளவர்களை விடவும் உனக்கு
உயர்வான வாழ்கை என்னால் தரமுடியும்
உயர்வானவன் நான் என்பதை
உலகாளும் ஈசனிடம் தெரிந்துகொள் !!!

வருவேன் வருவேன் என்று
பொய் உரைத்து வதைத்தாய்
வந்த பின் வழிந்தோடினாய்
சொல்லாமல் என்னை விட்டு

நீ படி துறை தாண்டுகையில்
என் பாதி உயிர் போச்சுதடி ...

உடனே உயிர் பெற்று வா
என் உறவிற்கு உயிர் கொடுக்க
தனிமையின் சுகத்தை தந்தாய்
என்னை தனிமையிலும் கிடத்திவிட்டாய்
இன்னும் என்ன என்ன திட்டமோ
சொல்லிவிடு என் மோகினி ...

கங்கையின் மேலானவள் நீ என்றால்
நான் மணக்க தகுதி உடையோள் நீயே
நீ மணக்க தகுதி பெற்றவனும் நானே

நினைவெல்லாம் நீயே
நிஜமெல்லாம் நீயே
கணவெல்லாம் நீயே
கண் பார்க்கும் இடமெல்லாம் நீயே
வாசனைகள் எல்லாம் நீயே
வார்த்தைகள் அனைத்திலும் நீயே

மோகம் இல்லை உன் மீது
யோகம் உண்டு உன்னை அடையும்போது !!!

வஞ்சி கொடியே
வாசனை மல்லியே
வற்றாத வசந்தமே ...

நிச்சயம் நீ சிந்தித்து இருக்க மாட்டாய்
என்னை உன் மணாளனாய்
என்னை உன் வாழ்க்கை துணையாய்
என்னை உன் சரி பாதியாய்

சில நொடிகள் நின்று செல்
எனக்காக சிந்தனை செய்
ராஜ ராஜேஸ்வரத்தில்
இந்த யுவராஜனை நினைத்து ...

உனக்கு நிச்சயம் புலப்படும்
கடாரம் வென்ற சோழனும் நானே
கழனிகளில் உன்னை ஊடரத்துவனும் நானே
உன் பிரியமான தோழனும் நானே
உன் பட்டம் பெற்றவனும் நானே
உன்னை பாடியவனும் நானே
ஞானியும் நானே

போதும் என் பாட்டு...

புரிந்தால் கூட்டி செல் என்னை
பூம்பட்டினத்திற்கு
இல்லையேல்
காத்திருப்பேன் கன்னி காலமெல்லாம்
உன் பயண சுகம் கண்டு
கரையோரம் கீதம் இசைப்பேன்
உன் காட்சி கண்டு ...

நீ வாழ நலமுடன்
உன் காதோரம் இசைத்து பாடுவேன்
"
வஞ்சி வாழிய வாழியவே " என்று ...

--------------------------------------------------------------
என் பாட்டும் புதிர்கள் போடும்
அது உனக்கு புரிந்தால் போதும்
--------------------------------------------------------------

சிலேடை ...
என் இரு மனைவியரை நினைத்து ...!!! 

Wednesday, February 6, 2013

என் பயணம்!

கிராமத்து வாசம்!!!

பஞ்சம் பிழைக்க பட்டினம் சென்றவன்
சிறு பிள்ளையாய் சித்திரையின் வரவை எதிர் நோக்கி
பங்குனியில் சில வேலை பட்டினி கிடந்தது சேர்த்து வைத்த பணத்தில்
அம்மாவுக்கும் , அப்பாவுக்கும் , தம்பிக், தங்கை என்று பட்டியல் போட்டு
பல நிறங்களில் பல வகைகளான ஆடைகளை வாங்கி
சொந்த ஊர் செல்லும் பல ஆயிரம் மனிதர்கள் மத்தியில்
பேருந்துக்காக காத்து இருந்து
அடித்து பிடித்து ஆரவாரம் செய்து இருக்கையை பிடித்து
அசை போடும் நினைவுகளோடும் , அளவில்லா ஏக்கத்தோடும்
துயில் கொள்ள துளி கூடு விருப்பம் இல்லாமல்
காலை விடியலை கண் தேட ...
சட்டென்று பயண வழி உணவகத்தில் பேருந்து நிற்கும் போது
மனம் கடிந்து ,
அவர்களும் மனிதர்கள் என்ற சிந்தனை மறந்து , ஊருக்கு செல்லும் ஆவலில்
சக பயணிகளோடு சேர்ந்து தாமும் ஓட்டுனரை திட்டி தீர்த்து விட்டு ...
ஒரு வழியாக விடிந்தும் விடியாத காலை பொழுதில்
தன்னையும் மறந்து ஏக்கத்தில் அயர்ந்து தூங்கி கொண்டு இருப்பவனை...
தம்பி ஊர் வந்து விட்டது என்னும் குரல் அவனை பர பரக்க வைத்து ...
சுமைகள் என கொண்டு வந்ததை ஒரு பயில்வான் போல சுமந்து
இன்முகத்தோடு தரையில் காலை வைக்கும் போது ...
மீண்டும் சோகம் உச்சத்திற்கு சென்று விடுகிறது கடிகாரத்தை பார்க்கும் போது ...
தன கிராமத்திற்கு செல்லும் முதல் பேருந்து வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்பதை உணர்தவுடன்
சட்டென்று ஒரு குரல் "மாப்பிள்ளை"
திரும்பி பார்க்கும் பொழுது ...
தன பின் ஒரு கூட்டம்...
ஆம் தன்னை போல் பல திசைகளுக்கு சென்றவர்கள் இவர்கள் ...
பிழைப்பு தேடி சென்றவர்கள்
இன்று சித்திரை திருநாளை குடும்பத்தோடு கொண்டாடி மகிழ வந்து இருப்பவர்கள் ...
அவரவர் தன் சுமைகளையும் சுகங்களையும் பகிர்ந்து கொண்டு இருக்கும் வேலையில்
இருளை கிழித்து கொண்டு வந்த கிராமத்து குயில் அனைவர் இதயத்தையும் துடிக்க வைத்தது ....
அதே பழைய நடத்துனர் ...
அடித்து பிடித்து இடம் பிடிக்கும் அனைவரையும் செல்லமாக கடிந்து கொண்டார் ...
ஒரு வழியாக பேருந்தில் அமர்ந்து தன் கிராமம் நோக்கி பயண படு வேலையில் ...
சில அன்பர்கள் நாளை சந்திப்போம் என வழியில் உள்ள அவரவர் கிராமங்களில் இறங்கி கொள்ள ...
இறுதியாக கருவிழிகளில் அவன் கிராமத்தின் பிம்பம் தென்பட்டது ...
பர பரத்தான், இடித்து தள்ளி வாசல் நோக்கி ஓடினான் ...
பேருந்து நிற்கும் முன்னரே இறங்கி விட்டான்...

ஆயிரம் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் மனதில் பறந்தன ...
இன்னார் மகனா என்று விசாரிப்புகள் பல
கால்கள் முறுக்கேறி நடையில் ஒரு கம்பீரம் ...
கண்ணில் வீடு தென் பட்டது ...

திருவிழாவிற்காக புதிய சுண்ணம் அடிக்க பட்டு இருந்தது
இதை பார்த்தவுடன் பங்குனி மத்தியில் கிடைத்த கடிதம் நினைவுக்கு வந்தது ...
ஆம் தன் தம்பி சுண்ணம் அடிக்க போவதாக அம்மா குறிப்பிட்டு இருந்தது ...

மேலும் திருவிழாவிற்காக கட்டப்பட்ட காப்பு கண்களுக்கு தென்பட்டது ...

அது வரை மேல் இருந்த கண்கள் சற்று தரை நோக்கி பயண படும் போது தான் உணர்ந்தது
தன் அக்காள் கோலம் போட்டு கொண்டு இருப்பதை ..
உணர்வதற்குள் வீடே வந்து விட்டது ...

தம்பியை கண்டவுடன் இன்ப அதிர்ச்சியில் கோல பொடியை உதறி விட்டு , அவன் சுமையை பெற்று கொண்டால் ...

ஆரவாரம் செய்த படி தன் வீட்டினுள் நுழைந்தாள்...
படுத்து தூங்கி கொண்டு இருந்த தன் தம்பியை வேகமாக எழுப்பி கொண்டே அம்மாவை அழைத்தாள் ...

அம்மா அடுப்படியில் இருந்தபடி என்ன என்று வினவினாள்
தம்பி வந்து விட்டான் என்று உரக்க சொல்லி கொண்டு இருக்கும் போதே கோவில் காரியமாக சென்று இருந்த அப்பா கையில் கணக்கு புத்தகத்தோடு வீட்டினுள் நுழைந்தார் ...

வாடா என்று சொல்லி கொண்டே அவனை கடிய தொடங்கினார்
உன்னை நேற்றே வர சொன்னேன் அல்லவா என்று ...

******************************

கதை தொடரும் .... விமர்சனங்களை பொருத்து

Sunday, April 8, 2012

நானும் மாறிவிட்டேன் போலும் !!!


மனிதர்களை கடவுளாக வழிபடும் மக்களை ஏளனம் செய்து உள்ளேன் .


சாமி என்ற போர்வையில் சாமான்னய மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கூட்டத்தினரை குறையில்லாமல் திட்டி இருக்கிறேன் .

நித்தியானந்த , சக்தி அம்மா , பங்கார...ு அடிகளார் , இன்னும் பிரபலங்கள் ஆகாத பல சாமியார்கள் என்று பல நிற திருடர்களை பார்த்து வெறுத்து உள்ளேன் ...

நிச்சயம் என் நிலை பாட்டில் நான் மாறாமல் இருப்பேன் என்று உறுதி பூண்டு இருந்தேன் ... அதாவது "மனிதர்களை சாமியாக வணங்குவது "!!!

இத்தருணம் நான் என் நிலைபாட்டில் இருந்து சற்றே விலகி ஒரு மனிதரை என் ஆருயிர் சிவ பிரானுக்கு அடுத்ததாக வைத்து வணங்குகிறேன் ...

இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை ... பிறர் கூறினாலும் , ஏளனம் செய்தாலும் கவலை பட போவதில்லை ...

காரணம் நான் வணங்கும் மனிதர் ...

அவரை பற்றி வருணிக்க என் தாய் தமிழில் வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கிறேன் ...

மாமேதை அவர் ...
நன்செய் கழனிகளின் நாயகர் அவர் ...
நடனமாடும் காவேரி பெற்ற பெரும் செல்வன் அவர் ...
உலகம் போற்ற விண்ணுயர் பெரிய கோவில் தந்தவர் அவர் ...
தோன்றிய இடங்களில் புலி கோடி நாட்டி திக்கெட்டும் வாகை சூடியவர் ...

வீர உடையார் ஸ்ரீ ராஜா ராஜா தேவர் !!!

நிச்சயம் என் வாழ்நாளின் கடைசி நொடிக்குள் என்னால் என் சக்திக்கு முயன்ற அளவு ஒரு சிறு கற்றளியாவது அவனுக்கு எழுப்புவேன் ...!!!

சிறந்த கலை பொக்கிஷங்கள் நிறைந்ததாக அதை அமைப்பேன் ... துவண்டு போன சிற்பக்கலையை நிலை பெற செய்வேன் ... அதுவே அவருக்கு மரியாதையை செலுத்த சால சிறந்த வழி ...

இது நான் உடையாருக்கு மட்டும் அல்ல சோழ வம்சத்துகே செய்ய கடமை பட்டு உள்ளேன் !!!

இது என் இரண்டாவது மிக பெரிய சுமையாகும் ...

முதல் சுமையை காலம் வரும் போது அனைவர் கண்களாலும் பார்த்து ரசிப்பீர்கள் !!!

இதை படித்த பின் வேடிக்கையாய் இருக்கிறது என்று என்னும் பலர் நிச்சயம் ஒரு நாள் நான் செய்து முடித்த பின் விழி பெருக்கி வேடிக்கை பார்பர் என் ராஜா ராஜனை!!!

இதை நான் இங்கு பகிர்வதற்கு காரணம் ...

நல்ல நல்ல யோசனைகளும் ... மேலும் தெளிவான வழி காட்டுதலும் எனக்கு கிடைக்கும் என்று நம்பி தான்... வாழ்க நம் தமிழ் தேசம் ...

சிந்திக்க ஒரு விநாடி !!!


தன் பொருளை விற்று சம்பாத்தியம் கண்டு ,கோடீஸ்வரர் பட்டியலில் சேர்ந்தஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ்...

இன்று பல தமிழக இளைஞர்கள் அவரை தங்கள் முன் மாதிரியாக நினைத்து கொள்கிறார்கள் ....

... தன் முப்பாட்டன் சேர சோழ பாண்டியர்கள்..........

அவரவர் துறையில் சிறந்து விளங்கி இன்றளவும் புகழின் உச்சியில் கோலோச்சி வாழும் நமது மா மேதைகளை நினைத்து கூட பார்க்க தயங்குகிறார்கள் ...

இது அவர்கள் குற்றம் அல்ல...

வரலாற்று பாடம் என்ற பெயரில் நம் பள்ளிகளில் கடமைக்காக நடத்த படும் பாட திட்டம் ,அதனை கடமைக்காக நடத்தும் ஒரு சில ஆசிரிய பெருமக்களும்...செய்கிற மாபெரும் தவறே ...


முதலாம் உலக போரில் மேற்கத்திய நாடுகள் சண்டை போட்டதை பற்றியும்... இரண்டாம் உலக போரின் மிரட்சியும் ... கஜினி முகமதின் படை எடுப்பையும் ... அலெக்சாண்டர் வீரத்தையும் ... அசோகனின் சமூக செயலையும் ...

தெரிந்து கொள்ள வேண்டி பாட திட்டம் அமைத்து விட்டனர் மாபாவிகள் ..

என் தமிழன் தன் இன மூதாதையர்களை பற்றி தெரிந்து கொள்ள வில்லை ...

ஏன் என் இனத்தில்

பாண்டிய வம்சம் இல்லையா ...
பல்லவனும் தொண்டை மான்களும் இல்லையா ?
சேர மன்னர்கள் இல்லையா ?
ராஜராஜன் போன்ற சோழர்கள் இல்லையா...?
குடவோலை முறை இல்லையா ?
அரிய பல கலைகள் இல்லையா ...?

எது இல்லை ...???

சற்று ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் ...

குறிப்பாக பள்ளி கல்வி துறையும் ...
அரசும் ஆசிரியர்களும் மாணவர்களும்
பெற்றோர்களும் சமூக சிந்தனை உள்ள பெரியோர்களும் ...

நடைமுறையை மாற்றி அமைப்போம்....


"நம் குல பெருமை அறிவோம்...
அவற்களிடம் இருந்த அறிய கலை பொக்கிஷங்களை காத்து
அதனினும் சிறப்பாக நம் சந்ததியற்கு விட்டு செல்வோம் .."

வாழ்க என் இனம் !!!

கவனமாக படியுங்கள் !!! தவறாமல் படியுங்கள் !!!


இங்கே இருக்கும் புகை படத்தை பார்த்து சிலர் நிஜமாகவே மனிதன் மீது இறக்கபடுவதுண்டு... தெய்வத்தை பலிபவனுண்டு ...



இங்கு இறைவனுக்கு அளிக்கப்படும் 10 லிட்டர் பசும் பாலை பற்றி கவலை படும் அன்பர்களே ...... இதை ஏன் ஏழை எளியவருக்கு குடுக்க கூடாது என்று ஆதங்க படும் அன்பர்களே ...

நாஸ்திகம் ஆஸ்தீகம் கடந்து கொஞ்சம் யோசிக்க தொடங்குங்கள் ...

1000 லிட்டர் அளவு பால் பண்ணைகளில் களவாடும் மனிதனை என்றாவது கேட்டு இருகீர்களா இது தகுமா என்று...

2000 லிட்டர் பொய் கணக்கும் எழுதி சம்பாதிக்கும் மூடர்களை திருத்தியது உண்டா...

பாதிக்கு மேல் தண்ணீர் கலப்பவனிடம் எதிர்த்து கூறியது உண்டா..

இதை துளி கூட செய்யாத நீங்கள் ...

கோவிலில் கொட்ட படும் பாலை பற்றி பேச தகுதி இல்லை...

கோவிலும் அதில் நிவேதியதிற்கு பிறகு அன்னதானமும் ஏழை மக்கள் பசியாரா தான்... இறைவன் பெயரால் வழி போக்கர்களும் பசி ஆற தான் கடல் போன்ற கோவில்கள் கட்டப்பட்டன ... சமத்துவம் வளர்க தான் கோவில்கள் ...

ஆனால் இன்று செய்யப்படும் செயல்கள் தான் என்ன ...

கோவிலுக்கு வரும் பாலை கொள்ளை அடிப்பதும்...

பசி யாரா ஏற்படுத்தப்பட்ட மட பள்ளிகளில் அடுப்பே எரியாமல் கணக்கு எழுதபடுவதும் ...

தானத்தில் சிறந்த அன்னதானத்தில் கலப்படங்களும் ...

ஏன் இங்க வீணாக கொட்டப்படும் பால் என்று கூறுவதை திருத்தி "தண்ணீரில் கலந்த பால் " என்று மிகவும் பொருள் பட கூறலாம் போலும், அந்த அளவிற்கு தவறு செய்யும் மனிதர்களை வைத்து கொண்டு ...

சமுதாய நலனிற்காக ஏற்படுத்தப்பட்ட சில சம்பிரதாயங்களை வீண் விமர்சனம் செய்யாமல் உங்களின் சக மனிதர்களையும் , உங்கள் உற்றத்தார் சுற்றத்தாரையும் திருத்தி "மனித மாண்போடும் ... மனிதாபிமானம் கொண்டு " வாழ பழகுங்கள் ...

உங்கள் கைகளில் உள்ளதை மற்றவருக்கு கொடுத்து உதவுங்கள் ... பொருள் குடுக்க வசதி இல்லை என்றாலும் பரவா இல்லை உங்களின் "அன்பு தாருங்கள் "... அது பல கோடிகளுக்கு சமம் ...

சில மூடர்கள் சொல்வதை சிந்திக்காமல் அவர்களை பின் தொடர்ந்து இப் படத்தில் உள்ளது போல் வீண் பேச்சு பேசாதீர்கள் ....

அடியேன் இக் கருத்து மூலம் உங்களின் மனதை காய படுத்தி இருந்தால் என்னை தாங்கள் மன்னித்து அருள வேண்டும் !!!

Saturday, September 3, 2011

சிந்திக்க ஒரு விநாடி

பாரதி 2011 இல் இருந்து இருக்க வேண்டும்!!!




"பெண்கள்" நாட்டின் கண்கள் என்று பாடியவன்
தவறு என்பதை உணர்ந்து இருப்பான் ...


 மேலும் "பெண்கள்" நாட்டின் ஆறாத "புண்கள்" என்று போற்றி இருப்பான் !!!


கலாச்சாரத்தை அளிக்கும் புற்று நோய்கள் பெண்கள் !!!
இதில் ஆண்கள் "தொற்று நோய்கள்" !!!

சிந்திக்க ஒரு விநாடி

இந்த பொண்ணுங்களே இப்படி தா !!!



ஆபத்திற்கு மட்டும் தாய் மொழியாம் "தமிழ்"
ஆடம்பரத்திற்கும் , அத்தியாவசிய தேவைக்கும் அந்நிய மொழியாம் "ஆங்கிலம்".....


 வாழ்வது தமிழகத்தில் ... உயிரையும் மெய்யையும் மறந்தனர்...
ஊரான் வீட்டு சொத்தை குத்தகைக்கு எடுத்தனர் !!!


மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என்பதை மட்டும் உணர்தனர்... தன வீட்டு முல்லைக்கு தண்ணீர் ஊற்ற வெட்க படுகின்றனர்....


வாழ்க தமிழ் பெண்கள்... வாழ்க உங்கள் ஆங்கில கலாச்சார மோகம் !!!